தென்னிந்திய சினிமா

மலையாள நடிகை அபர்ணா வினோத்துக்கு நிச்சயதார்த்தம்

செய்திப்பிரிவு

விஜய்யின் ‘பைரவா’ படத்தில் கீர்த்தி சுரேஷ் தோழியாக நடித்தவர், மலையாள நடிகை அபர்ணா வினோத். பரத்தின் ‘நடுவன்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள இவருக்கும் கோழிகோடு பகுதியைச் சேர்ந்த ரினில் ராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அபர்ணா, “உன்னைச் சந்தித்த அந்த நாள்தான் அனைத்திற்குமான ஆரம்பம்” என்று கூறியுள்ளார்.

தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், “உனக்காக பொறந்தேனே எனதழகா/ பிரியாம இருப்பேனே பகல் இரவா”என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்குத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT