தென்னிந்திய சினிமா

காப்பி அடிக்கப்பட்டதா காந்தாரா பாடல்?

செய்திப்பிரிவு

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து ஹிட்டான கன்னடப் படம், ‘காந்தாரா’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் பாடல்களும் ஹிட்டாகியுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள, ‘வராஹ ரூபம்’ என்ற பாடல் தங்களுடைய ‘நவரசம்’ ஆல்பத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்று, பிரபல ‘தய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற மலையாள இசைக் குழு புகார் கூறியுள்ளது.

இதுகுறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் அந்த இசைக்குழுக் கூறியுள்ளது. ஆனால், இதை மறுத்துள்ள ‘காந்தாரா’ இசை அமைப்பாளர் அஜனீஷ், இரண்டு பாடல்களும் ஒரே ராகத்தில் இசை அமைக்கப் பட்டுள்ளதால் ஒன்றுபோல் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT