கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தையும் தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார், இயக்குநர் ஷங்கர். இந்த மாத இறுதியில் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த ஷெட்யூலை தொடங்கும் ஷங்கர், அடுத்த மாதம் 20-ம் தேதிக்கு முன் முடிக்கிறார்.
பிறகு ராம் சரண் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குகிறார். அந்தப் படத்தின் பாடல் காட்சி, நியூசிலாந்தில் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக ஷங்கர், ராம் சரண், நாயகி கியாரா அத்வானி, நடன இயக்குநர் போஸ்கோ உள்ளிட்ட படக்குழு அடுத்த மாத இறுதியில் அங்கு செல்கிறது. 10 நாட்கள் இந்தப் பாடல் காட்சியை அங்கு படமாக்க உள்ளனர்.