அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கிய இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. பான் இந்தியா முறையில் வெளியான இப்படம், அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்றது. இதன் 2-ம் பாகம் இப்போது உருவாகிறது. அதில், பஹத் பாசில் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக இந்தி நடிகர் அர்ஜுன் கபூர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இதை தயாரிப்பாளர் நவீன் மறுத்துள்ளார். ‘‘இது தவறான செய்தி. அந்த கேரக்டரில் பஹத் பாசில்தான் நடிக்கிறார்’’ என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.