காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தை தழுவி உருவாகியுள்ள படம், ‘சாகுந்தலம்’. இதில் சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். மற்றும் அதிதி பாலன், அனன்யா, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி உட்பட பலர் நடித்துள்ளனர்.
குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகி உள்ளது. இது நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி படக்குழு கூறும்போது, ‘‘படத்தை 3-டியில் மாற்ற உள்ளோம். இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளனர்.