தென்னிந்திய சினிமா

அமெரிக்காவில் சமந்தா பயிற்சி

செய்திப்பிரிவு

நடிகை சமந்தாவுக்கு சருமப் பிரச்னை இருப்பதாகவும் அதற்கான சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அவர் நடித்து வரும் வெப் தொடருக்காக, அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் உட்பட பலர் நடித்த ஆங்கில வெப் தொடர், ‘சிட்டாடல்’. இந்த தொடரின் ரீமேக்கில் வருண் தவானுடன் நடித்து வருகிறார் சமந்தா. ராஜ் மற்றும் டீகே இயக்கும் இந்தத் தொடரின் கேரக்டருக்கான உடலமைப்பை பெறுவதற்காகவும் ஆக்‌ஷன் பயிற்சிக்காகவும் அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என்கிறார்கள். அங்கு பிரபலமான பயிற்சியாளர்களிடம் அவர் பயிற்சிப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT