தென்னிந்திய சினிமா

பிரபலமான கன்னட நடிகர், நடிகைகள் - முதலிடம் பிடித்த ராஷ்மிகா

செய்திப்பிரிவு

நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழில் விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். அமிதாப்பச்சனுன் அவர் நடித்துள்ள ‘குட்பை’, அக்டோபர் 7-ம் தேதி வெளியாகிறது. இந்திப் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடித்துள்ள ‘மிஷன் மஜ்னு’ அடுத்து வெளியாக இருக்கிறது. ரன்பீர் கபூருடன் ‘அனிமல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று மிகவும் பிரபலமான கன்னட நடிகர், நடிகைகள் யார் என்கிற கருத்துக் கணிப்பை சமீபத்தில் நடத்தியது. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா முதலிடத்தையும் ரச்சிதா ராம் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். ‘கே.ஜி.எஃப்’ ஹீரோ யாஷ், நடிகர்களில் முதலிடத்தையும் சுதீப் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT