தென்னிந்திய சினிமா

பவன் கல்யாண் - த்ரிவிக்ரம் பட நாயகி கீர்த்தி சுரேஷ்

ஸ்கிரீனன்

த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கிஷோர் குமார் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் 'கட்டமராயுடு' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் இப்படத்தின் அனுப் ரூபன்ஸ் இசையமைத்து வருகிறார். அஜித் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தின் ரீமேக் இது.

அதனைத் தொடர்ந்து நேசன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பவன் கல்யாண். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து தனது 25வது படத்தை பிரம்மாண்டமான முறையில் திட்டமிட்டு வருகிறார் பவன் கல்யாண். த்ரிவிக்ரம் இயக்கவிருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் விஜய்யுடன் 'பைரவா' படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நாயகியான பவன் கல்யாணுக்கு நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

SCROLL FOR NEXT