தென்னிந்திய சினிமா

இணையத்தில் கசிந்த காட்சிகள்: பாகுபலி 2 படக்குழு அதிர்ச்சி

செய்திப்பிரிவு

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'பாகுபலி 2' படத்தில் சில சண்டைக்காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் இருக்கிறது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பாகுபலி 2'. 'பாகுபலி' படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பால் 2ம் பாகத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

ராஜமெளலி இயக்கி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், யாரும் எதிராபாரத விதமாக, 'பாகுபலி 2' படத்தின் சண்டைக் காட்சிகளில் ஒரு சிறுபகுதி இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இதில் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் சில எதிரி நாட்டு போர் வீரர்களுடன் வாக்குவாதம் செய்வது போலவும், அதனைத் தொடர்ந்து சண்டைத் தொடங்குவது போன்று அக்காட்சிகள் அமைந்திருக்கின்றன.

படப்பிடிப்பு தளத்துக்குள் யாருக்குமே அனுமதி கிடையாது, பெரும் கெடுபிடிகள் உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி இணையத்தில் காட்சிகள் வெளியானதால் 'பாகுபலி 2' படக்குழு பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது.

இக்காட்சிகள் குறித்து இதுவரை படக்குழுவினர் யாருமே தங்களுடைய கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT