தென்னிந்திய சினிமா

இசையமைப்பாளர் டிஎஸ்பி உடன் ரகசிய திருமணமா? - நடிகை பூஜிதா மறுப்பு

செய்திப்பிரிவு

தமிழில் ‘சச்சின்’, ‘வில்லு’, ‘கந்தசாமி’, ‘சிங்கம்’, ‘வீரம்’, ‘தி வாரியர்’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், தெலுங்கிலும் பிசியாக இருக்கிறார். ’புஷ்பா’ படத்தில் அவர் இசை அமைத்த பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின.

அவர், தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னடாவை ரகசிய திருமணம் செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாயின. இதுபற்றி தேவி ஸ்ரீ பிரசாத் ஏதும் சொல்லாத நிலையில், நடிகை பூஜிதா மறுத்துள்ளார்.

‘‘நான் யாரையும் காதலிக்கவில்லை.சமூக வலைதளங்களில் தவறானத் தகவல்கள் பரப்பப்படுகின்றன. நான் ரகசிய திருமணம்செய்து கொண்டதாகக் கூறுவதும் பொய். இப்படிப்பட்ட தகவல்களை எங்கிருந்து உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை’’ என்று கூறியுள்ளார். நடிகை பூஜிதா, தமிழில்‘செவன்’ என்ற படத்தில்நடித்துள்ளார். இப்போது ‘பகவான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

SCROLL FOR NEXT