தென்னிந்திய சினிமா

சிறந்த கதைக்கு ரூ.1 கோடி சிரஞ்சீவி முடிவு: சினிமாவில் மீண்டும் நடிக்கிறார்

செய்திப்பிரிவு

முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான சிரஞ்சீவி, சினிமாவில் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். விரைவில் இவர் நடிக்கவுள்ள தனது 150-வது சினிமாவுக்கு, சிறந்த கதை எழுதும் கதாசிரியருக்கு ரூ.1 கோடி ஊதியம் தர சிரஞ்சீவி முடிவு செய்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

தெலுங்கு திரைப்பட உலகில், என்.டி.ஆர்., நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா போன்ற ஜாம்பவான் கள் கோலோச்சிய காலத்தில், யாருடைய ஆதரவுமின்றி, தெலுங்கு திரைப்பட உலகில் நுழைந்தவர் கொனி தால சிவசங்கர வரபிரசாத் எனும் சிரஞ்சீவி. பின்னர், படிப்படியாக தெலுங்கு திரைப்பட உச்சிக்கு சென்றார். ‘மெகா ஸ்டார்’ என ரசிகர்கள் அன்புடன் அவரை அழைத்தனர். இவரது மூத்த தம்பி, நாகபாபு, இளைய தம்பி பவன் கல்யாண், மகன் ராம்சரண், இவரது மைத்துனர் மகன் அல்லு அர்ஜுன் ஆகியோரும் கதா நாயகர்களாக வலம் வருகின்றனர்.

இதனிடையே சிரஞ்சீவி, சினிமாவை விட்டு விலகி அரசிய லில் நுழைந்து ‘பிரஜா ராஜ்ஜியம்’ எனும் கட்சியைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளிலேயே, காங் கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைத்தார். பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரானார். கடந்த தேர்தலில் சீமாந்திரா பகுதியின் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சார கமிட்டி தலைவராக செயல்பட்டார். ஆனால் மாநில பிரிவினை முடி வால், காங்கிரஸ் ஆந்திர மாநிலத் தில் படுதோல்வியை சந்தித்தது.

தற்போது மீண்டும் சினிமா வில் நடிக்க சிரஞ்சீவி முடிவு செய் துள்ளார். இதுவரை 149 படங்களில் நடித்துள்ள இவர், தனது 150-வது படம், சிறந்த கதை அம்சம் உள்ளதாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறார். இதை அறிந்து பலர் கதைகளை கூறியும் அவருக்கு திருப்தி ஏற்பட வில்லை. ஆதலால், தனக்கு ஏற்ற கதையை கூறும் கதாசிரியருக்கு ஊதியமாக ரூ.1 கோடி வழங்க சிரஞ்சீவி முடிவு செய்துள்ளதாக தெலுங்கு திரைப்பட உலகினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT