விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள படம், ’லைகர்’. பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். புரி ஜெகநாத் இயக்கியுள்ள இந்தப் படம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ளது.
வரும் 25ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி விஜய தேவரகொண்டா கூறும்போது, இதில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பில் ஒரு நாள், தவறுதலாக என் முகத்தில் ஓங்கிக் குத்திவிட்டார். நாள் முழுவதும் வலியால் துடித்தேன். ‘நோட்டா’ படத்துக்குப் பிறகு தமிழில் ஏன் நடிக்கவில்லை என்கிறார்கள். தமிழில், லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், பா.ரஞ்சித் எனக்குப் பிடித்த இயக்குநர்கள். அவர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன் என்றார்.