தென்னிந்திய சினிமா

தமிழில் ரீமேக் ஆகிறது மோகன்லாலின் புலிமுருகன்

ஸ்கிரீனன்

மோகன்லால் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'புலிமுருகன்', தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

வைஷாக் இயக்கத்தில் மோகன்லால், கமலினி முகர்ஜி, ஜெகபதிபாபு, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'புலிமுருகன்'. பெரும் பொருட்செலவில் வெளியான இப்படம் மலையாளத்தில் அதிக வசூலான படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.

இப்படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டி நிலவியது. இறுதியில் மொத்தமாக இந்திய ரீமேக் உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் கைப்பற்றி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க முன்னணி நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

இப்படத்தின் ரீமேக்கை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து முலகுப்பாடல் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

மோகன்லாலின் 'புலிமுருகன்' படத்துக்கு முன்பாக வெளியான 'ஒப்பம்' படமும் பெரும் வரவேற்பு பெற்றது. தனது முந்தைய படத்தின் சாதனையை அடுத்த படத்தில் மூலமாக முறியடித்திருக்கிறார் மோகன்லால்.

SCROLL FOR NEXT