தென்னிந்திய சினிமா

தெலுங்கு, இந்தியில் ரீமேக்கப்படும் துல்கர் சல்மான் படம்

செய்திப்பிரிவு

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள 'கம்மட்டிப்பாடம்' திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகிலும், இந்தியில் அர்ஜுன் கபூரும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'கம்மட்டிப்பாடம்' திரைப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆக தயாராகிறது.

அகில் மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை ஆனால் இந்தக் கதை அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அவர்கள் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியில் பல படங்களில் ஒளிப்பதிவாளராக ராஜீவ் ரவி பணியாற்றியுள்ளதால், 'கம்மட்டிப்பாடம்' படத்தை இந்தியிலும் இயக்க அவர் ஆர்வமாக உள்ளார்.

SCROLL FOR NEXT