தென்னிந்திய சினிமா

'மிகச்சிறந்த தொலைநோக்கு சிந்தனையாளர்' - பில் கேட்ஸை சந்தித்த மகேஷ் பாபு

செய்திப்பிரிவு

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. இவர் நடித்த சில படங்கள் தமிழில் விஜய் நடித்த கில்லி மற்றும் போக்கிரி படங்களாக ரீமேக் செய்யப்பட்டன. மேலும் சில ஆண்டுகள் முன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இவர் ஸ்பைடர் என்ற திரைப்படத்தில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய சர்காரு வாரிபாட்டா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கீர்த்தி சுரேஷ் இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த சந்தோசத்தில் மனைவியுடன் அமெரிக்கா பறந்திருக்கும் மகேஷ் பாபு நேற்று ஒரு விவிஐபியை சந்தித்துள்ளார். அந்த விவிஐபி வேறு யாரும் அல்ல. உலகப் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில்கேட்ஸ் தான். எதிர்பாராத விதமாக பில் கேட்ஸை சந்திக்க அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர் மகேஷ் பாபுவும் அவரின் மனைவி நர்மதாவும்.

இந்தப் புகைப்படத்தை வலைதளங்களில் பகிர்ந்துள்ள மகேஷ் பாபு, "பில்கேட்ஸை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சி. உலகம் இதுவரை பார்த்த மிகச்சிறந்த தொலைநோக்கு சிந்தனையாளர்களில் ஒருவர் அவர். எனினும், மிகவும் எளிமையான மனிதரும்கூட. உண்மையில் மிகச்சிறந்த உத்வேகம்” என வியந்துள்ளார்.

SCROLL FOR NEXT