தென்னிந்திய சினிமா

ஜூனியர் என்டிஆர் - கொரட்டலா சிவா படத்தில் சாய் பல்லவி?

செய்திப்பிரிவு

ஜூனியர் என்டிஆர் - கொரட்டலா சிவா இணையும் படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு நடிகர் ஜூனியர் என்டிஆர், இயக்குநர் கொரோடலா சிவாவுடன் கைகோக்கிறார். ஜூனியர் என்டிஆர் - கொரட்டலா சிவா இணையும் 'என்டிஆர் 30' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். ஜூனியர் என்டிஆரின் மிரட்டும் கெட்டப்பில் ’என்டிஆர்30’ படத்தின் ப்ரோமோ வீடியோ அவரது பிறந்த நாளுக்கு வெளியிடப்பட்டது.

பான் இந்தியா முறையில் தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இந்த படத்தின் நாயகியாக ஆலியா பட் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அவர் திடீரென விலகிவிட்டார். அவரைத்தொடர்ந்து ஜான்வி கபூர் நடிப்பதாக கூறப்பட்டது. அவர், 'நான் நடிக்கவில்லை' என மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், இந்தத் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

SCROLL FOR NEXT