யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் இதுவரை உலக முழுவதும் ரூ.1200.76 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள படம் 'கேஜிஎஃப்: சாப்டர் 2’. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இந்தி நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த ஏப்.14-ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீஸான நாளில் இருந்தே வசூலை குவித்து வரும் இப்படம், உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது 33 நாளில் ரூ.1200.76 கோடி வசூலித்து இப்படம் மேலும் சாதனை படைத்துள்ளது.
ஆமிர்கானின் ‘தங்கல்’, ராஜமவுலியின் ‘பாகுபலி’ ஆகிய படங்கள் ஏற்கெனவே ரூ.1200 கோடி வசூலை எட்டியது.
இந்த நிலையில் 'கேஜிஎஃப்' படத்தின் 3-வது பாகத்தை தயாரிப்பதற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கெளடா கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேஜிஎஃப் 3 படம் எப்போது வெளியாகும், யார் யார் நடிப்பார்கள் என்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.