சேத்தனா 
தென்னிந்திய சினிமா

கொழுப்பை குறைக்கும் சிகிச்சையின்போது கன்னட இளம் நடிகை சேத்தனா மரணம்

செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த நடிகை சேத்தனா ராஜ் (21), ஹவயாமி என்ற கன்னட திரைப்படத்திலும் கீதா என்ற சின்னத்திரை தொடரிலும் நடித்துவந்தார். கடந்த சில மாதங்களாக புதிய பட வாய்ப்புகளுக்காக‌ சேத்தனா ராஜ் தனது உடல் பருமனை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் உடலில் உள்ள கொழுப்பை நீக்கும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக ராஜாஜி நகரில் உள்ள டாக்டர் ஷெட்டி'ஸ் காஸ்மெட்டிக் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று அறுவை சிகிச்சையின் போது திடீர் மாரடைப்பின் காரணமாக சேத்தனா ராஜ் உயிரிழந்தார்.

இதையடுத்து சேத்தனா ராஜின் தந்தை கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில் ராஜாஜி நகர் போலீஸார் மருத்துவர் சாஹேப்கவுடா ஷெட்டி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சேத்தனா ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் டாக்டர் ஷெட்டி'ஸ் காஸ்மெட்டிக் மருத்துவமனை மருத்துவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT