அல்லு அர்ஜூனும், இயக்குநர் போயப்பட்டி ஸ்ரீனுவும், சிம்மாச்சல மலையில் உள்ள ஸ்ரீ வராக நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் சென்று திரும்பும்போது கோயில் லிஃப்டில் மாட்டிக் கொண்டனர்.
அல்லு அர்ஜூன், இயக்குநர் ஸ்ரீனு மற்றும் தயாரிப்பு மேலாளர் சத்யநாராயணா ஆகியோர் நரசிம்ம சுவாமி கோயிலில் சிறப்பு பிரார்த்தனையை முடித்துக் கொண்டு திரும்பும்போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இதுகுறித்துக் கூறிய போலீஸார், "தொழில்நுட்ப பிரச்சனையால் ஏற்பட்ட பழுது காரணமாக, லிஃப்ட் பாதியிலேயே நின்றிருக்கிறது. பாதுகாப்பு அலுவலர்கள் கதவை உடைத்து, அவர்களை பத்திரமாக மீட்டிருக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட பிறகே கோயில் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்." என்றனர்.