ராம்கோபால் வர்மா தயாரிக்கும் முதல் இணைய தொடரான 'தகனம்' தொடர் எம்எக்ஸ் ப்ளேயர் தளத்தில் வெளியாகியுள்ளது.
ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராம்கோபால் வர்மா - இஷா கோபிகர் ஆகிய இருவரும் இணைந்துள்ள இணைய தொடர் 'தகனம்'. டிரெய்லரின் வழியே அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்த தொடரில், இஷா கோபிகர், நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அபிலாஷ் சவுத்ரி, சாயாஜி ஷிண்டே, அஷ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண் மற்றும் பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். க்ரைம், த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த தொடரை ராம் கோபால் வர்மா தயாரிக்க, அகஸ்தியா மஞ்சு இயக்கியுள்ளார். முதலில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் இந்தி மற்றும் தமிழிலும் டப் செய்யப்படுகிறது. இந்த தொடர் தற்போது எம்எக்ஸ் ப்ளேயரில் காணக்கிடைக்கிறது.
மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள இந்த தொடரை பற்றி தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா பேசுகையில், ''எனது முதல் OTT தொடரான ''தகனம்'' தொடரை எம்எக்ஸ் ப்ளேயர், உடன் இணைந்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
'தகனம்' வெறும் பழிவாங்கும் கதையல்ல, பழிவாங்கும் உணர்வின் கதையைச் சொல்கிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் அல்ல, ஆனால் இது உங்களை உறைய வைக்கும், உணர்வுப்பூர்வமாக சிலிர்க்க வைக்கும், குற்றங்களைப் பற்றியது.
தீவிரமான மெத்தட் ஆக்டிங் நடிகர்களை தேடிதேடி தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த தொடருக்கு பார்வையாளர்கள் தரும் வரவேற்பை காண எங்கள் குழு முழுவதும் ஆவலுடன் காத்திருக்கிறது'' என்றார்.