ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் உலக அளவில் இதுவரை 900 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கடந்த மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அஜய் தேவ்கன், ஸ்ரேயா, ஆலியா பட், சமுத்திர கனி உள்ளிட்டோர் நடித்துள்ள பான் இந்தியா திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' வசூல் வேட்டையில் மிரட்டி வருகிறது. படம் வெளியான முதல் வாரம் 709.36 கோடி ரூபாய் வசூலானதாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
படம் வெளியாகி இன்றுடன் 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக 900 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலும் படம் பிளாக்பஸ்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பிரீமியர் ஷோக்கள் மூலம் இப்படம் ரூ.32.01 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.