நடிகை அனுஷ்கா ஷெட்டி இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் திரையுலகுக்கு திரும்பியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் அவருக்கான புகழை அதிகரித்தது. ஆனால், அதன்பிறகு பெரிதான படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படம் 2020ல் வெளிவந்த நிசப்தம். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தவர், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு திரையுலகுக்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா, ஜதி ரத்னலு போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த நவீன் பொலிஷெட்டியின் புதிய படத்தில் அனுஷ்கா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் 40 வயது பெண் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. பான் இந்தியா படமாக இது தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மற்றொரு படத்திலும் அனுஷ்கா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது நடிகர் பிரபாஸின் அடுத்த படம்தான். பிரபல தெலுங்கு இயக்குநர் மாருதி பிரபாஸை வைத்து ’ராஜா டீலக்ஸ்’ என்கிற படத்தை எடுக்கவிருக்கிறார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பிரபாஸ் அனுஷ்கா இருவரும் ஏற்கனவே இணைந்து நடித்ததால் இருவரும் மீண்டும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.