நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே, ராஜமெளலி இயக்கத்தில் 'ரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர்ஆர்ஆர்) உலகம் இன்று வெளியானது. முதல் நாளில் கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனினும், 'பாகுபலி'க்குப் பிறகான ராஜமெளலியின் பிரமாண்ட படைப்பு இது என்பதாலும், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருப்பதாலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதற்கான வரவேற்பு இருந்து வருகிறது.
ஆந்திராவில் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும், இணைந்திருப்பதால் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் திரையரங்குகளுக்கு வருகிறார்கள். மேளம், தாளம், கட் அவுட் அவர்கள் திரையரங்குகள் முன் அமர்களப்படுத்துகின்றனர். இதேபோல் இன்று காலையில் சென்னையிலும் பல திரையரங்குகளில் ஆர்ஆர்ஆர் ரிலீஸ் கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. இதன் புகைப்படத் தொகுப்பு கீழே:
புகைப்படம் - வி ராஜு
வாசிக்க: முதல் பார்வை | ஆர்ஆர்ஆர் - வியத்தகு விஷுவல் ட்ரீட் ஓகே... ஆனால், உணர்வுபூர்வமாக ஒட்டாத படைப்பு!