தென்னிந்திய சினிமா

‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செய்திப்பிரிவு

‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக்கான ‘போலா ஷங்கர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வேதாளம்' 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சிவா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வெளியிட்டார்.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அஜித் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி, லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மெஹர் ரமேஷ் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது.

இன்று (மார்ச் 1) சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ‘போலா ஷங்கர்’ படத்திலிருந்து சிரஞ்சீவியின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இது, சிரஞ்சீவ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தினை அனில் சுக்ராவின் ஏ.கே எண்டர்டையின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

SCROLL FOR NEXT