தென்னிந்திய சினிமா

மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் விக்ரம்?

செய்திப்பிரிவு

மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘சர்காரு வாரி பாட்டா’. இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மகேஷ் பாபு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கவுள்ள 28வது படத்தை திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் ஹைதரபாத்தில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஏப்ரல் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிகர் விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் முதன்முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT