ஓடிடி ரசிகர்கள், இணையவாசிகள் மத்தியில், ‘ஷியாம் சிங்க ராய்’ தெலுங்கு படம்பற்றிய சிலாகிப்புகள் அதிகம் வலம் வருகின்றன. அதில் நாயகன் நானிக்கு, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி என 2 ஜோடிகள்.கடந்த 2019-ல் ஹ்ருத்திக் ரோஷன் நடித்த‘சூப்பர் 30’ இந்தி படத்தில் அறிமுகமான கீர்த்தி, அதன்பிறகு, 2 ஆண்டுகளில் 5 தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனாலும் புகழின் உச்சியில் இருக்கிறார்.
இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாகநடித்து, பொங்கலுக்கு வெளியான ‘பங்கார்ராஜு’ அதிரடி வெற்றியை அள்ளியிருக்கிறது. இதற்கிடையில், தெலுங்கு, தமிழில்லிங்குசாமி இயக்கி முடித்துள்ள ‘தி வாரியர்’ படத்தில் கீர்த்தி ஷெட்டிதான்நாயகி. கீர்த்தியை தமிழ் திரை உலகுக்கு யார் முதலில் அழைத்து வருவதுஎன்பதில் கோலிவுட் மாஸ் ஹீரோக்கள் மத்தியில் கடும் போட்டி நடக்கிறது.