தென்னிந்திய சினிமா

தென்னிந்திய சினிமாவும், சூப்பர் ஸ்டார்களும் காத்திரமாக தெரிவது ஏன்? - கங்கனா ரனாவத் சொல்லும் 4 பாயின்ட்ஸ்

செய்திப்பிரிவு

தென்னிந்திய சினிமாவின் நாயகர்களும், அவர்கள் தெரிவுசெய்யும் கதைக் கருவும் காத்திரம் கொண்டதாக இருப்பது ஏன் என்பது குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.

'பாகுபலி', இந்தி மொழி பேசும் மக்கள் மத்தியில் தென்னிந்திய சினிமாவுக்கான வரவை ஏற்படுத்தி கொடுத்தது, தென்னிந்திய ஹீரோக்கள், பான்-இந்தியா ஸ்டார் என்ற நிலைக்கு உயர வித்திட்டுள்ளது. 'பாகுபலி' மூலமாக பிரபாஸ், 'கேஜிஎப்' மூலமாக யஷ் வடக்கில் தங்களுக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளனர். இவர்கள் வரிசையில் லேட்டஸ்ட் வரவு 'புஷ்பா' அல்லு அர்ஜுன். 'புஷ்பா' திரைப்படம் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் வடக்கு பெல்ட்டில் படத்துக்கு நல்ல வரவேற்பை இருந்தது.

இதற்கு மத்தியில் சில தினங்கள் முன் தனியார் ஊடகம் ஒன்று 'கேஜிஎப்' இரண்டாம் பாகம் மற்றும் 'புஷ்பா' இரண்டாம் பாகம் தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டது. பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் இந்தப் பதிவை ஷேர் செய்து தென்னிந்திய ஹீரோக்கள் தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், "தென்னிந்திய ஹீரோக்களும், அவர்களின் படங்களின் கருவும் ஏன் இவ்வளவு காத்திரமாக உள்ளது என்பதற்கு சில காரணங்கள்.

1. அவர்கள் இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியவர்கள்.

2. அவர்கள் தங்களின் குடும்பம் மற்றும் உறவுகளை நேசிக்கிறார்கள்.

3. அவர்கள் மேற்கத்திய மயமாக இருக்கவில்லை.

4. அவர்களின் தொழில்முறை மற்றும் ஆர்வம் இணையற்றது" என்று தெரிவித்துள்ளதுடன், "பாலிவுட் அவர்களை கெடுப்பதற்கு அனுமதிக்கக் கூடாது" என்று கங்கனா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 'புஷ்பா' படத்தின் ஊ அண்டாவா பாடலின் பின்னணியில் இந்தப் பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT