தென்னிந்திய சினிமா

மீண்டும் ஷங்கர் படத்தில் வில்லனாகும் சுரேஷ் கோபி

செய்திப்பிரிவு

ஷங்கர் இயக்கி வரும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் சுரேஷ் கோபி.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஐ'. இதில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுரேஷ் கோபி. இந்தப் படத்துக்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது தெலுங்கில் ராம்சரண் நடித்து வரும் புதிய படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். தில் ராஜு தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் பாடல் ஒன்றைப் படமாக்கி வருகிறது படக்குழு. தெலுங்கில் அதிக பொருட்செலவில் உருவாகும் பாடல் இதுதான் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, இந்தப் படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சுரேஷ் கோபி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் அவர் மட்டுமின்றி இன்னும் 2 வில்லன் கதாபாத்திரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் நடிப்பதற்கு நடிகர்கள் ஒப்பந்தமாகி விட்டாலும், அதனை ரகசியமாக வைத்துள்ளது படக்குழு.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி, நவீன் சந்திரா, சுனில் உள்ளிட்ட பலர் ராம் சரணுடன் நடித்து வருகிறார்கள். இதற்கு ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT