தென்னிந்திய சினிமா

18 நாட்களில் மோகன்லாலின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவு

செய்திப்பிரிவு

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு 18 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது.

'மராக்கர்', 'ஆராட்டு', 'பரோஸ்', 'ப்ரோம் டாடி' மற்றும் '12த் மேன்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் மோகன்லால். இதில் சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகும் 'அலோன்' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் மோகன்லால்.

செப்டம்பர் 27-ம் தேதி பூஜையுடன் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது 18 நாட்கள் படப்பிடிப்பில், ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு. சரியாகத் திட்டமிட்டு படமாக்கியதால் மட்டுமே இது சாத்தியமானது என்று இயக்குநர் ஷாஜி கைலாஷ் தெரிவித்துள்ளார்.

ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் கதையை ராஜேஷ் ஜெயராம் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளராக அபிநந்தன் ராமானுஜம், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக டான் மேக்ஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT