நாக சைதன்யாவின் குடும்பத்தினர் கொடுக்க முன்வந்த ஜீவனாம்சத்தை வாங்க சமந்தா மறுத்துவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
நாக சைதன்யா - சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் இருவருக்கிடையே பேசிய சமரசம் அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளது.
இதனிடையே, நாக சைதன்யா குடும்பத்தினர் கொடுக்க முன்வந்த 200 கோடி ரூபாய் ஜீவனாம்சத்தை சமந்தா வாங்க மறுத்துவிட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்செய்தி வைரலாகப் பரவி வருகிறது.
இது தொடர்பாக சமந்தா தரப்பில் விசாரித்தபோது, "நாக சைதன்யா குடும்பத்தினர் ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்தது உண்மைதான். ஆனால், அது 200 கோடி ரூபாய் எல்லாம் அல்ல. தான் சுயமரியாதையுடன் வாழ விரும்புவதாகக் கூறி, சமந்தா ஜீவனாம்சத்தை வாங்க மறுத்துவிட்டார்.
மேலும், நாக சைதன்யா - சமந்தா இருவரும் வாழ்ந்துவந்த ஹைதராபாத் வீட்டை சமந்தா சொந்தமாக வாங்கிவிட்டார். தற்போது அதில்தான் வசித்து வருகிறார். இனிமேல் முழுக்க சினிமாவில்தான் கவனம் செலுத்துவார்" என்று தெரிவித்தார்கள்.