2014-ம் ஆண்டு 'அமர காவியம்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். அதனைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை', 'ஒருநாள் கூத்து', 'வெற்றிவேல்', 'ரம்', 'யமன்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். மலையாளத் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்திலும் மியா ஜார்ஜ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கேரளாவைச் சேர்ந்த அஷ்வின் ஃபிலிப் என்கிற தொழிலபதிருடன் மியா ஜார்ஜுக்கு திருமணம் நடைபெற்றது. எர்ணாகுளத்தில் உள்ள கிறிஸ்துவ தேவலாயத்தில் எளிமையான முறையில் நடந்த இந்த திருமணம் யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்பட்டது.
இந்நிலையில் மியா ஜார்ஜ் - அஷ்வின் தம்பதியினர் தங்களது குழந்தையை முதன்முதலாக அறிமுகம் செய்தனர். இதனை மியா தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தான் கர்ப்பமாக இருந்தது குறித்தோ, குழந்தை பிறந்தது குறித்தோ சமூக வலைதளங்களில் தெரிவிக்காமல் ரகசியம் காத்து வந்தார் மியா ஜார்ஜ். இந்த சூழலில் நேற்று (ஜூலை 6) தங்கள் குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மியா பகிர்ந்துள்ளார். குழந்தைக்கு லூகா ஜோசப் பிலிப் என்று பெயரிட்டுள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.