தென்னிந்திய சினிமா

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'அந்தாதூன்' தெலுங்கு ரீமேக்

செய்திப்பிரிவு

'அந்தாதூன்' தெலுங்கு ரீமேக்கான 'மாஸ்ட்ரோ' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது.

இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாள ரீமேக் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன. தெலுங்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின், தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

'மாஸ்ட்ரோ' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தொடங்கப்பட்டது. மெர்லபாகா காந்தி இயக்கி வருகிறார். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருந்த சமயத்தில்தான் கரோனா இரண்டாவது அலை ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியிருப்பதால், ஹைதராபாத்தில் படப்பிடிப்புகளுக்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 'மாஸ்ட்ரோ' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தை தாகூர் மது வழங்க, சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக மஹதி ஸ்வர சாகர் மற்றும் ஒளிப்பதிவாளராக ஹரி கே.வேதாந்த் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT