சல்மான் கான், பிரபுதேவா கூட்டணியில் இந்தியில் உருவான ‘ராதே’ படத்தை ஓடிடி வழியாக வெளியிட்டது ஜீ ஸ்டுடியோஸ். ஓடிடி-யில் வெளியாகி ரூ.260 கோடி வரை வசூலானதில் படத் தயாரிப்பாளர் சல்மான் கான் மகிழ்ச்சியில் உள்ளார்.
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் மற்றொரு படத்தில் இணையவும் பேச்சு நடக்கிறது. ஓடிடி-யில் வெளியாகும் படங்கள் வசூல் குவிப்பதாக கருத்து உள்ளதால், ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், இந்தியில் வெளியிட திட்டமிட்டு உருவாகிவரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைவெளியிடும் உரிமையையும் ஜீ ஸ்டுடியோஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய்தேவ்கன், ஆலியாபட் நடித்துள்ள இப்படத்தை ரூ.330 கோடிக்கு அந்நிறுவனம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.