மலையாளத்தில் மோகன்லால், ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் வேலைகள் நடக்கின்றன. ‘தனி ஒருவன்’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்குகிறார். மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார்.
ப்ரித்விராஜ் கதாபாத்திரத்தில் இந்திநடிகர் சல்மான் கானை நடிக்க வைக்க கடந்த ஆண்டு முதல்பேச்சு நடந்துவந்தது. இந்நிலையில், சிரஞ்சீவி கேட்டுக்கொண்டதால், இதில் நடிக்க சல்மான் கான் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்ப, கதையில் சில மாறுதல்கள் செய்து, கதாபாத்திரங்களை வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது. ஊரடங்கு முடிவுக்கு வந்ததும், பணிகள் வேகம் எடுக்கும் என்று தெரிகிறது.