தென்னிந்திய சினிமா

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கரோனா தொற்று: தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாவது அலையின் காரணமாகத் தொற்று, சென்ற ஆண்டை விட அதிகமாகப் பரவி வருகிறது. திரையுலகிலும் பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கங்களில் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

"அனைவருக்கும் வணக்கம். எனக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். அத்தனை வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்.

வாய்ப்பு கிடைக்கும்போது உடனடியாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நான் நலமாக இருப்பதால் என்னைப் பற்றி எனது நல விரும்பிகளும், ரசிகர்களும் கவலைகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அல்லு அர்ஜுன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT