தென்னிந்திய சினிமா

‘தீ’ படத்தின் இரண்டாம் பாகம்: ‘டி அண்ட் டி’ போஸ்டர் வெளியீடு

ஐஏஎன்எஸ்

‘தீ’ தெலுங்குப் படம் வெளியாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகத்துகான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

2007ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘தீ’. இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, ஜெனிலியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஸ்ரீனு வைட்லா இயக்கிய இப்படம் தமிழிலும் வினய், சந்தானம் நடிப்பில் ‘மிரட்டல்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளைப் படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். ஸ்ரீனு வைட்லா இயக்கும் இப்படத்திலும் விஷ்ணு மஞ்சுவே நடிக்கிறார். இப்படத்துக்கு ‘டி அண்ட் டி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் போஸ்டரை விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளான நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படத்தை விஷ்ணு மஞ்சுவின் 24 ஃப்ரேம்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. மஹதி ஸ்வரா சாகர் இசையமைக்கும் இப்படத்தின் கதையை ‘தீ’ படத்தின் கதாசிரியரான கோபி மோகன் எழுதியுள்ளார்.

படத்தின் நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகையர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT