தென்னிந்திய சினிமா

தெலுங்கு தயாரிப்பாளர் ஏடித நாகேஸ்வர ராவ் காலமானார்

செய்திப்பிரிவு

தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஏடித நாகேஸ்வர ராவ் (82) காலமானார்.

‘சங்கராபரணம்’, ‘ஸ்வாதி முத்யம்’ (சிப்பிக்குள் முத்து), “ஸ்வாயம்குருஷி’, ‘சாகர சங்கமம்’ (சலங்கை ஒலி) உள்ளிட்ட பிரபல படங்களைத் தயாரித்தவர் ஏடித நாகேஸ்வர ராவ். இவரது தயாரிப்பில் வெளியான பல்வேறு படங்கள் தேசிய விருதை வென்றுள்ளன.

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

நாடக நடிகராக தனது பயணத்தைத் தொடங்கிய இவர், டப்பிங் கலைஞராக வளர்ந்து பின்னர் சினிமா தயாரிப்பாளராக வலம் வந்தவர். தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர், நந்தி விருது கமிட்டி உறுப்பினர், தேசிய விருது கமிட்டி உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஏடித நாகேஸ்வர ராவ், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை நடக்கிறது.

SCROLL FOR NEXT