அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள 'நின்னிலா நின்னிலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
'ஓ மை கடவுளே' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமானார் அசோக் செல்வன். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே சமயத்தில் இந்தப் படம் தயாராகி வந்தது.
மலையாளத் திரையுலகில் பிரபலமான இயக்குநர் ஐவி சசியின் மகன் அனி சசி இந்தப் படத்தினை இயக்கி வருகிறார். இதன் பெரும்பாலான காட்சிகள் இங்கிலாந்தில் படமாக்கப்பட்டன. இதில் நித்யா மேனன், ரீத்து வர்மா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தற்போது படத்துக்கு 'நின்னிலா நின்னிலா' என்று தலைப்பிட்டுள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக்கைப் பார்க்கும்போது முழுக்க சமையலை மையப்படுத்திய படம் என்பது தெளிவாகிறது.
ஒளிப்பதிவாளராக திவாகர் மணி, இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன், பாடலாசிரியராக ஸ்ரீமணி, எடிட்டராக நிவின் உள்ளிட்டோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்துள்ளனர். 2021-ம் ஆண்டு 'நின்னிலா நின்னிலா' வெளியாகும் எனத் தெரிகிறது.