தென்னிந்திய சினிமா

அமிதாப்புடன் நடிப்பது மகிழ்ச்சி: கனவு நிறைவேற உள்ளதாக பிரபாஸ் உற்சாகம்

செய்திப்பிரிவு

அமிதாப் பச்சனுடன் நடிக்க இருப்பதால் தனது நீண்ட நாள் கனவு நிறைவேற உள்ளதாக நடிகர் பிரபாஸ் உற்சாகத்துடன் கூறியுள்ளார்.

வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில்நடிகர் பிரபாஸ் தனது 21-வது படத்தில் நடிக்க உள்ளார். இதில்அவருக்கு ஜோடியாக தீபிகாபடுகோன் நடிக்கிறார். பல கோடிரூபாய் செலவில் இப்படம் எடுக்கப்படுகிறது. பெயரிடப்படாத இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனும் நடிக்க உள்ளார். இத்தகவலை திரைப்படக் குழுவினர் நேற்றுசமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரபாஸ் கூறும்போது, ‘‘என் நீண்ட நாள் கனவு,இத்திரைப்படம் மூலம் விரைவில் நிறைவேற உள்ளது. இதில் நடிக்க ஒப்புக்கொண்ட அமிதாப் பச்சனுக்கு நன்றி’’ என்றார்.

அமிதாப் பச்சன் கூறும்போது,‘‘இப்படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன். படம் வெற்றியடைய என் வாழ்த்துகள்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT