தென்னிந்திய சினிமா

போதை மருந்து விவகாரம்: விவேக் ஓபராய் மைத்துனர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு

ஐஏஎன்எஸ்

பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுக்கும் நடிகர் விவேக் ஓபராயின் மைத்துனர் ஆதித்யா அல்வாவை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர். ஆதித்யா தேசத்தை விட்டு இன்னும் தப்பிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதால் அவரைப் பிடிக்க கவன ஈர்ப்புச் சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

கன்னடத் திரைத்துறையில் போதைப்பொருள் பயன்பாடு பற்றிப் பேசி சர்ச்சையை ஆரம்பித்தவர் தயாரிப்பாளரும் இயக்குநருமான இந்திரஜித் லங்கேஷ். மத்திய குற்றப் பிரிவு காவல்துறை இவரிடம் விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் 15 நபர்களின் பெயர்களை லங்கேஷ் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

லங்கேஷ் சொன்னதை வைத்து ரவி என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். ரவியின் வாக்குமூலத்தை வைத்து நடிகை ராகினியைக் கைது செய்தனர். நயாஸ் என்பவரை விசாரித்தபோது நடிகை சஞ்சனா கல்ராணியின் பெயர் வெளியே வந்தது. தொடர்ந்து சஞ்சனாவும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

போதை மருந்து தொடர்பாக நடிகை ராகினி வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது முதலே ஆதித்யா தலைமறைவாகிவிட்டார். இவரோடு சேர்த்து ஷிவபிரகாஷ் சிப்பி என்பவரையும் காவல்துறை தேடி வருகிறது. ஆதித்யா இந்த வழக்கின் 6-வது குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.

ஆதித்யாவைப் போலவே தலைமறைவாகியிருக்கும் சிப்பி ஒரு தொழிலதிபர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். நடிகை ராகினியின் நெருங்கிய நண்பர்.

ஆதித்யாவுக்குச் சொந்தமாக ஹவுஸ் ஆஃப் லைஃப் என்கிற நான்கு ஏக்கர் ரிசார்ட் உள்ளது. இதில்தான் ஆதித்யா பல்வேறு கன்னட நட்சத்திரங்களுக்காக வார இறுதியில் பார்ட்டிகளை நடத்தியுள்ளார். மேலும், போதை மருந்து விநியோகமும் நடந்துள்ளது. செப்டம்பர் 14 அன்று இந்த ரிசார்ட்டிலும், ஆதித்யாவின் வீட்டிலும் மத்திய குற்றப் பிரிவு காவல்துறை சோதனை மேற்கொண்டது. .

ஆதித்யா அல்வா மறைந்த முன்னாள் அமைச்சர் ஜீவ்ராஜ் அல்வாவின் மகன். ஜீவ்ராஜ் மிகச் செல்வாக்கான, அதிகாரமிக்க அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். அவரது காலத்தில் முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டேவுக்கு வலதுகரமாகச் செயல்பட்டவர்.

SCROLL FOR NEXT