பழம்பெரும் இயக்குநரும் நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தையுமான ஏபி ராஜ் ஞாயிற்றுக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 95.
ஆலப்புழாவில் பிறந்த ஏபி ராஜின் முழு பெயர் ஆண்டனி பாஸ்கர் ராஜ். இலங்கையில் தான் முதன் முதலில் இயக்குநராக தனது பயணத்தைத்தொடக்கினார். சிங்கள மொழியில் சில படங்களை இயக்கினார்.
மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கும் முன், தி ப்ரிஜ்ட் ஆன் தி ரிவர் கவாய் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் இரண்டாவது யூனிட்டில் இணை இயக்குநராகப் பணியாற்றினார்.
பின்னர் மலையாளத்தில் 45 படங்களுக்கு மேல் இயக்கினார். தமிழில் துள்ளி ஓடும் புள்ளிமான், கை நிறைய காசு ஆகியப் படங்களை மட்டுமே இயக்கியிருந்தார்.
ஞாயிற்றுகிழமை அன்று மாரடைப்பின் காரணமாக ஏபி ராஜ் காலமானார். இவரது மகள் தான் பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணன்.