தென்னிந்திய சினிமா

தெலுங்கில் அறிமுகமாகும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ்

ஸ்கிரீனன்

த்ரிவிக்ரம் இயக்கவிருக்கும் புதிய படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற ஒப்பந்தமாகி இருக்கிறார் நட்ராஜ். அவர் பணியாற்ற இருக்கும் முதல் தெலுங்கு படம் இது.

'ப்ளாக் ப்ரைடே', 'ராஞ்சனா' உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்கள் மூலம் புகழ் பெற்றவர் ஒளிப்பதிவாளர் நட்ராஜ். தமிழில் 'சதுரங்க வேட்டை' படத்தில் நாயகனாக நடித்தாலும், நீண்ட நாட்கள் கழித்து விஜய் நடித்திருக்கும் 'புலி' படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

'புலி' படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. அக்டோபர் 1ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

தற்போது தெலுங்கில் முன்னணி இயக்குநரான த்ரிவிக்ரம் இயக்கவிருக்கும் புதிய படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் நட்ராஜ். நிதின் மற்றும் சமந்தா நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT