தென்னிந்திய சினிமா

மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் தமன்

செய்திப்பிரிவு

'கடுவா' என்ற படத்தின் மூலம் மலையாளத்திலும் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார் தமன்.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. தமன் இசையமைப்பில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தமிழில் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படம், தெலுங்கில் 'வக்கீல் சாப்', 'சர்காரு வாரி பாட்டா', 'டக் ஜெகதீஷ்' உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்து வருகிறார். இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்திருக்கிறார்.

தற்போது, மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடிக்கும் 'கடுவா' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் தமன். ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் முழுக்க கமர்ஷியல் பாணியில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்க உள்ளது.

ப்ரித்விராஜுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு, தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT