தென்னிந்திய சினிமா

டிக் டாக்கில் பிரபலம்: நடிகையான ஐஸ்வர்யா ராய் சாயல் அம்ருதா

செய்திப்பிரிவு

நடிகை ஐஸ்வர்யா ராய் சாயலில் இருக்கும் அம்ருதா சஜு என்பவருக்கு டிக் டாக்கில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பெருகி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில், பிரபல நடிகர் நடிகைகளைப் போன்ற சாயலில் இருப்பவர்களுக்கென்று தனியாக ரசிகர் கூட்டம் உண்டு. டிக் டாக்கிலும் இது வாடிக்கைதான். அப்படி ஐஸ்வர்யா ராய் பச்சனைப் போலவே இருக்கும் கேரளாவைச் சேர்ந்த அம்ருதா சஜுவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இணையத்தில் குவிந்துள்ளனர்.

அம்ருதா, ஐஸ்வர்யா ராயின் பிரபலமான வசனங்கள், காட்சிகளை டிக் டாக்கில் நடித்து அதன் மூலம் பிரபலமானார். அம்மூஸ் அம்ருதா என்பது டிக் டாக்கில் இவரது பெயர். வழக்கமாக இப்படிப் பிரபலமாகும் நபர்களிடம், நீங்கள் திரைப்படங்களில் நடிக்கலாமே என்றும் சொல்லப்படும். ஆனால், அம்ருதா ஏற்கெனவே திரைப்படத்தில் நடித்திருப்பது பலருக்குத் தெரியவில்லை.

வெளியாகவிருக்கும் 'பிக்காஸோ' என்ற மலையாளப் படத்தில் நாயகியாக அம்ருதா நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியானது. இன்னும் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும், விளம்பரப் படங்களிலும் அம்ருதா நடித்துள்ளார். நடிப்பில் ஆர்வம் இருக்கும் அம்ருதா தனக்கு அற்புதமான கதாபாத்திரங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT