தென்னிந்திய சினிமா

மீண்டும் இணையும் பவன் கல்யாண் - ஹரிஷ் சங்கர் - தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணி

செய்திப்பிரிவு

பவன் கல்யாண் - ஹரிஷ் சங்கர் இணையும் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன், அபிமன்யு சிங், சுஹாசினி உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012-ம் ஆண்டு மே 11-ம் தேதி வெளியான படம் 'கபார் சிங்'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் 8 ஆண்டுகள் நிறைவை நேற்று பவன் கல்யாண் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.

இதற்காக ட்விட்டர் தளத்தில் சுமார் 12 மில்லியன் ட்வீட்களைக் கொட்டினார்கள் பவன் கல்யாண் ரசிகர்கள். இது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. 'கபார் சிங்' படக் கூட்டணியான பவன் கல்யாண் - ஹரிஷ் சங்கர் இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

நேற்றைய கொண்டாட்டத்தின் இடையே, இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரியவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக 'கபார் சிங்' படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசை. இதனால் பவன் கல்யாண் - ஹரிஷ் சங்கர் - தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணி படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கவுள்ளது.

SCROLL FOR NEXT