'100’, ’பைராதேவி’, ’ஷிவாஜி சுரத்கல்’ ஆகிய மூன்று கன்னடப் படங்களிலும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரமேஷ் அரவிந்த்.
34 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் ரமேஷ் அரவிந்தின் 101-வது படம் ’ஷிவாது சுரத்கல்’. இதுவரை அதிகம் சண்டைக் காட்சிகளில் தோன்றாத ரமேஷ் அரவிந்த் முதல் முறையாக '100' படத்துக்காக சண்டை போடவுள்ளார்.
ஒரே வருடத்தில் மூன்று படங்களில் போலீஸாக நடிப்பது பற்றிக் கேட்டால், "கதாபாத்திரத்தின் வகை மாறும் வரை போலீஸாக நடிப்பதில் எனக்குப் பிரச்சினையில்லை. ’பைராதேவி’ படத்தில் நான் வழக்கமான போலீஸாக நடிக்கிறேன். ஷிவாஜி சுரத்கலில் நான் ஒரு துப்பறிவாளன் மற்றும் '100' படத்தில் நான் சைபர் குற்றங்களை விசாரிப்பதில் நிபுணன்.
அப்படி ஒரு சைபர் குற்றத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியின் வீடே ஒரு சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதே '100' படத்தின் கதை. ஷிவாஜி சுரத்கல் ஒரு கொலை விசாரணையைப் பற்றிய படம். 'பைராதேவி' ஒரு அமானுஷ்ய த்ரில்லர் கதை" என்று தெரிவித்துள்ளார் ரமேஷ் அரவிந்த்.