மலையாள நடிகை பாமாவுக்கு அருண் என்ற தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கடந்த 2007ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நிவேத்யம் என்ற படத்தின் மூலம் கேரள திரையுலகில் நுழைந்தவர் நடிகை பாமா. இவரது இயற்பெயர் ரெகிதா ராஜெந்திர குருப்.
கடைசியாக மலையாளத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான மறுபடி என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சில கன்னட திரைப்படங்களிலும் நடித்துவந்தார்.
இந்நிலையில் நடிகை பாமாவுக்கு ஆலப்புழாவை சேர்ந்த அருண் என்ற தொழிலதிபர் ஒருவருடன் நேற்று (22.01.2020) நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இத்தகவலை பாமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உறுது செய்துள்ளார்.
பாமா - அருண் திருமணம் ஜனவரி மாத இறுதியில் கொச்சியில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.