தென்னிந்திய சினிமா

ஒரு சமூகமாக நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம்: மகேஷ் பாபு ஆதங்கம்

செய்திப்பிரிவு

ஒரு சமூகமாக நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக மகேஷ் பாபு பதிவிட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவுலு ஆகியோரைக் கைது செய்துள்ளது காவல்துறை.

பிரியாங்க ரெட்டி மரணம் தொடர்பாக பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பதிவில், "எத்தனை நாட்கள் ஆனாலும், எத்தனை மாதங்கள் ஆனாலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எதுவும் மாறவில்லை. ஒரு சமூகமாக நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம். மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு என்னுடைய தனிப்பட்ட கோரிக்கையை அனுப்புகிறேன்.

பிரதமர் மோடி மற்றும் கே.டி.ராமாராவ் அவர்களே! இதுபோன்ற கொடூரக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளும், கண்டிப்பான சட்டங்களும் நமக்கு வேண்டும். பெண்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். உங்களுடைய வலி செய்ய முடியாதது. நம் நாட்டில் உள்ள அனைத்து மகளிர் மற்றும் இளம்பெண்களுக்கு நீதி கிடைக்க நாம் ஒன்றிணைவோம். இந்தியாவைப் பாதுகாப்பானதாக உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.

SCROLL FOR NEXT