தென்னிந்திய சினிமா

13 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் நடிக்கும் அதிதி ராவ்

செய்திப்பிரிவு

ஜெயசூர்யா ஜோடியாக, 13 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் மலையாளத்தில் நடிக்கிறார் அதிதி ராவ்.

ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ப்ரஜாபதி’. மம்மூட்டி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக அதிதி ராவ் நடித்தார். இந்தப் படத்தின் மூலம்தான் நடிகையாக அவர் அறிமுகமானார். 2006-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது.

அதன்பிறகு, ‘காற்று வெளியிடை’, ‘பத்மாவத்’, ‘செக்கச்சிவந்த வானம்’, ‘சம்மோஹனம்’ என ஏராளமான தமிழ், இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார்.

இந்நிலையில், 13 வருடங்கள் கழித்து மறுபடியும் மலையாளப் படமொன்றில் நடிக்கிறார் அதிதி ராவ். ஜெயசூர்யா ஜோடியாக அவர் நடிக்கிறார். ‘சூஃபியும் சுஜாதயும்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, நரணிபுழா ஷாநவாஸ் இயக்குகிறார்.

மியூஸிக்கல் ரொமான்டிக் படமாக உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு நாளை (செப்டம்பர் 20) தொடங்க இருக்கிறது.

தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘சைக்கோ’ படத்தில் நடித்துள்ளார் அதிதி ராவ். இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இதுதவிர நானி ஜோடியாக ‘வி’ என்ற தெலுங்குப் படத்திலும், விஜய் சேதுபதி ஜோடியாக ‘துக்ளக் தர்பார்’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்து வருகிறார் அதிதி ராவ்.

என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்

SCROLL FOR NEXT