தென்னிந்திய சினிமா

நிவின் பாலிக்கு நாயகியாக அதிதி பாலன் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

நிவின் பாலி நடிக்கவுள்ள 'படவெட்டு' படத்தின் நாயகியாக அதிதி பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தயன் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் 'லவ் ஆக்‌ஷன் டிராமா'. ஓணம் பண்டிகை வெளியீடாக இந்தப் படம் விமர்சன ரீதியாக போதிய வரவேற்பைப் பெறவில்லை. வசூல் ரீதியாகச் சிறு வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த 'மூத்தோன்' படத்துக்கு திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து நிவின் பாலி நடிப்பில் 'படவெட்டு' என்ற படம் உருவாகவுள்ளது. இதனை அறிமுக இயக்குநர் லிஜோ கிருஷ்ணா இயக்கவுள்ளார். மலையாள நடிகர் சன்னி வேய்ன் தயாரிக்கவுள்ளார். இதன் நாயகியாக நடிக்க அதிதி பாலனை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

'அருவி' படத்துக்குப் பிறகு வேறு எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமலிருந்தார் அதிதி பாலன். 'படவெட்டு' படத்தின் கதையைக் கேட்டு உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT